மகிழ்வூட்டும் கற்றல்
தமிழாசிரியர்களின் புதுமையான கற்பித்தல் உத்திகளை அறிந்துகொள்ளுங்கள். மாணவர்களை மகிழ்வோடு கற்கவைத்த அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
Last updated on 16 August 2026

மகிழ்வூட்டும் கற்றலைப்பற்றி இப்புத்தகத்தின்மூலம் அறிந்துகொள்ளலாம்.
இன்று நம் பள்ளிகள், மாணவரை மையமாகக்கொண்ட பாடத்திட்ட அணுகுமுறையைப் பின்பற்றிக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தமது மாணவர்களை மகிழ்வூட்டும் கற்றலில் சிறப்பாக ஈடுபடுத்துவதற்குக் கற்பித்தலில் பல உத்திகளையும் புதுப்புது முயற்சிகளையும் கையாண்டு வரும் நம் தமிழாசிரியர்கள் அவற்றை மகிழ்வூட்டும் வண்ணம் அமைத்துக்கொள்வது அவசியமாகிறது. மாணவர்களைப் பாடப்பொருளோடு ஈடுபடுத்தி, அவர்களுக்குத் தனி அதிகாரமும் சுதந்திரமும் அளித்துப் பொருள்ள கற்றல் நடைபெறுவதற்கு ஆசிரியர்கள் சிலர் முயன்றனர். அவர்களின் தொகுப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
