என்னால் முடியும்
சிறப்புக் கல்வித் தேவையுடைய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட "என்னால் முடியும்" அட்டைத் தொகுப்பு, தமிழாசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றல் தேவைகளை நிறைவேற்ற உதவுகிறது.
Last updated 18 August 2026

சிறப்புக்கல்வித் தேவையுடைய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட அட்டைகள் அடங்கிய தொகுப்பு
மாறுபட்ட தேவைகளையுடைய மாணவர்கள் பள்ளிகளில் தமிழ்மொழி பயிலும்போது அவர்களின் கற்றல் தேவைகளுக்கேற்பத் தமிழாசிரியர்கள் அவர்களுக்குத் தனிப்பட்ட நிலையில் கூருணர்வோடு ஆதரவளிக்க வேண்டியிருக்கிறது. இதனைக் கருத்திற்கொண்டு, தொடக்கநிலை 5முதல் உயர்நிலை 2வரை பயிலும் சிறப்புக் கல்வித் தேவையுடைய (Special Educational Needs) மாணவர்களுக்கும் மெதுநிலை மாணவர்களுக்கும் (Low Progress) இந்த என்னால் முடியும் நடவடிக்கை அட்டைகள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
