Skip to main content
A Singapore Government Agency Website How to identify
Official website links end with .gov.sg
Secure websites use HTTPS
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
Professional Development of Tamil Language

தொடக்கப்பள்ளி (Primary School)

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குரிய வளங்கள் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

Last updated 27 August 2026

எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம்

மாணவர்களின் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை மேம்படுத்த உதவும் கற்பித்தல் வடிவமாதிரி, மூன்று கட்ட உத்திமுறைகள் மற்றும் பிற வளங்களை இங்கே காணலாம்.

என்னால் முடியும்

சிறப்புக் கல்வித் தேவையுடைய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட "என்னால் முடியும்" அட்டைத் தொகுப்பு, தமிழாசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றல் தேவைகளை நிறைவேற்ற உதவுகிறது.

படைப்பாக்கத்துடன் கற்பித்தல்

படைப்பாக்கத்திறன் வளர்ச்சி மற்றும் பாட ஆய்வு அணுகுமுறை பற்றிய விளக்கங்களும் பாடங்களும் இந்நூலில் உள்ளன. தமிழ்மொழி கற்பித்தலில் படைப்பாக்க முறைமைகளை ஒருங்கிணைக்க இது உதவும்.

பாடும் தமிழ்

பாடல்வழித் தமிழ் கற்பிக்க உதவும் இரு வழிகாட்டு நூல்களை இங்கே காணலாம். இசைப் பின்னணியோடு பாடல்கள், ஒலிப்பதிவுகள், ஒளிக்காட்சிகள் அடங்கிய இத்தொகுப்புகள் மாணவர்களின் மொழித்திறனை வளர்க்க உதவும்.

பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம்

பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை மேம்படுத்த இந்நூல் உதவுகிறது. கற்பித்தல் உத்திகள், மதிப்பீட்டு முறைகள், மாதிரிப் பாடங்கள் மற்றும் பயிற்சி வளங்களை இங்கே காணலாம்.

விளையாட்டுவழிக் கற்றல்

விளையாட்டுவழிக் கற்றலை மையமாகக்கொண்ட இந்த அறிமுக நூல், மாணவர்களுக்கு மொழியறிவையும் பண்பாட்டறிவையும் கற்பிக்க உதவுகிறது.