தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம்
27 June 2026
2025ஆம் ஆண்டு, மே 19ஆம் தேதியில் ‘தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம்’ அறிமுகங்கண்டது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர், திருவாட்டி சாந்தி செல்லப்பன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இக்களஞ்சியத்தை வெளியீடு செய்தார். அந்த வெளியீடு நிகழ்வை ஒளிக்காட்சிவழிக் கண்டு மகிழவும்.
தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தின் பெருந்திட்டங்களுள் ஒன்று, ‘தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம்’ என்னும் தலைப்பிலான வளமைத் தொகுப்பை உருவாக்குவதாகும். அதன் அடிப்படையில், தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியத்தில் 50 இலக்கணத் தலைப்புகளும் 50 ஒளிக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தமிழாசிரியர்கள் தம் தமிழ் இலக்கண அறிவை ஆழப்படுத்துவதற்கும் தன்னிச்சையான கற்றலில் ஈடுபடுவதற்கும் இக்களஞ்சியம் சிறந்த வழிகாட்டியாக விளங்கும்.
மரபு இலக்கணத்தின் முக்கியத்துவம் கருதி, அதற்குரிய இடத்தை அளிப்பதோடு, இக்காலத் தமிழின் பயன்பாட்டில் நிகழ்ந்துவரும் மொழிமாற்றங்கள், அறிவியல் அடிப்படையிலான மொழியியல் கோட்பாடுகள் முதலியவற்றையும் இலக்கணத் தலைப்புகளுக்குரிய விளக்கங்கள் எடுத்துரைக்கின்றன. கூடுதல் விளக்கங்களைப் பெறவேண்டி, ஒளிக்காட்சிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் இணைப்பின்வழித் தொகுப்பினைப் படித்தும் கண்டும் இன்புறுக.
Tamil Grammar Chat Board: https://chatgpt.com/g/g-6a0f15d780b48191ab94da545a63b00d-tmilll-ilkknn-minnnceeaalai (opens in new tab)
(இந்த உரையாட்டு எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் உங்களின் கூகுள் மின்னஞ்சலைப் பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.
