தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம் - வெளியீடு
2025ஆம் ஆண்டு, மே 19ஆம் தேதியில் ‘தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியம்’ அறிமுகங்கண்டது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர், திருவாட்டி சாந்தி செல்லப்பன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இக்களஞ்சியத்தை வெளியீடு செய்தார். அந்த வெளியீடு நிகழ்வை ஒளிக்காட்சிவழிக் கண்டு மகிழவும்.
தமிழ் இலக்கண மின்-சோலை
சோலையின் இதமான காற்றும் ஆங்கே காணப்படும் பல்வகை மரஞ்செடிகொடிகளின் வனப்பும் மணமுள்ள வண்ணப் பூக்களும் நம் உள்ளத்தைச் சுண்டியிழுப்பதுபோல, இம்மின்னூல் மரபிலக்கணத்துக்கு முதன்மை கொடுத்தாலும் இக்காலத் தமிழ்மொழிப் பயன்பாட்டில் காணப்படும் மாற்றங்கள், அறிவியல் அடிப்படையில் எடுத்துரைக்கப்படும் மொழியியல் கூறுகள், பிற இணைப்புகள், ஒளிக்காட்சிகள் முதலியவற்றைப் பன்முக நோக்குடன் வழங்குகிறது. ஆதலால், இந்நூல் தமிழ் இலக்கண மின்-சோலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கண உரையாட்டு எந்திரம்
தமிழ் இலக்கண மின்னிலக்கக் களஞ்சியத்தினை எளிமையாகப் பயன்படுத்துவதற்குரிய வகையில் உரையாட்டு எந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பயன்படுத்தலாம்.
Tamil Grammar Chat Board: https://chatgpt.com/g/g-6a0f15d780b48191ab94da545a63b00d-tmilll-ilkknn-minnnceeaalai (opens in new tab) (opens in new tab) (opens in new tab)
(இந்த உரையாட்டு எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் உங்களின் கூகுள் மின்னஞ்சலைப் பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.)
