Students' Resources
மாணவர்க்கான கற்றல் வளமைகள் (Students' Resources)
மாணவர் கதைக்கொத்து 1 & 2
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காகத் தமிழாசிரியர்கள் எழுதிய
இரு கதைத் தொகுப்புநூல்கள். ஒவ்வொரு தொகுப்பிலும் எட்டுக் கதைகள் வீதம் மொத்தம் பதினாறு கதைகள் இடம்பெற்றுள்ளன. இவை மாணவர்களின் அகன்ற வாசிப்புக்கு மிகவும் பயன்படக்கூடியவை.
விளையாட்டுவழிக் கற்றலுக்கான வளமைகள்
இவ்வளைமைத் தொகுப்பில்
2 அட்டை விளையாட்டுகளும்
3 பலகை விளையாட்டுகளும்
அடங்கியுள்ளன. இவை மேல்தொடக்கநிலை
மாணவர்களின் மொழி, பண்பாட்டு அறிவினை விளையாட்டுவழி மகிழ்வூட்டும் வகையில் வளர்ப்பதற்குத் துணைபுரிகின்றன.
இருவழித்தொடர்பு மின்னூல்கள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேல்தொடக்கநிலை மாணவர்களுக்காக எழுதிய கதைகளுள் மூன்று, இருவழித்தொடர்பு மின்னூல்களாக மறு உருவாக்கம் கண்டுள்ளன. இவை மாணவர் கற்றல் தளத்தில் (SLS) ஏற்றம் செய்யப்பட்டுள்ளன.
பாடும் தமிழ் 2: சுவரொட்டிகள்
‘பாடும் தமிழ் 2’ நூலில் இடம்பெற்றுள்ள 10 பாடல்கள்கொண்ட சுவரொட்டிகள் ஆசிரியரின் கற்பித்தலுக்கும்; மாணவர்களின் பார்வைக்கும் வகுப்பறையில் காட்சிக்கு வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளன. j'கற்பித்தலுக்கும் மாணவர்களின் பார்வைக்கு வகுப்பறையில் காட்சிக்கு வைப்பதற்கும் வழங்கப்பட்டுள்ளன.