Teachers' Creed
ஆசிரியர் உறுதிமொழியை அடிப்படையாகக்கொண்டு ஆசிரியர் பணிக்குரிய ஐந்து கோட்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோட்பாடு 1
நாங்கள் எங்கள் குறிக்கோளில் உண்மையாக நடந்துகொள்வதன்வழி மாணவர்களிடம் காணப்படும் சிறப்பியல்புகளை வெளிக்கொணர்வோம்.
எங்கள் செயல்கள் மாணவரை மையமாகக்கொண்டே அமையும்.
1.1 மாணவரது முழுமையான வளர்ச்சிக்கு உரமூட்டுவோம்.
1.2 அக்கறை காட்டுதல், மதித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவருடன் தரமான உறவை வளர்ப்போம்.
கோட்பாடு 2
நாங்கள் எங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் செயலாற்றுவதில் முன்மாதிரியாக விளங்குவோம்.
நாங்கள் ஆசிரியப் பணியை மதிக்கிறோம்.
2.1 ஆசிரியப் பணியின் உயர்தரத்தைக் கட்டிக்காப்போம்
2.2 ஆசிரியப் பணியின் கண்ணியத்தைக் கட்டிக்காப்போம்
கோட்பாடு 3
நாங்கள் எங்கள் மாணவர்களை நல்ல, பயன்மிக்க சிங்கப்பூர்க் குடிமக்களாகத் திகழ்வதற்கு வழிகாட்டுவோம்.
நாங்கள் சிங்கப்பூரின் தேசியச் சூழலுக்கேற்றவாறு மாணவர்க்குக் கற்பிப்போம்.
3.1 பள்ளிகளின் பொதுமைக் கூறுகளைப் பாதுகாப்போம்.
3.2 எல்லா மாணவர்க்கும் வாய்ப்புகளை வழங்குவோம்.
கோட்பாடு 4
நாங்கள் தொடர்ந்து கற்றுவருவதோடு மாணவர்களிடையே கற்கும் உள்ளார்வத்தை வளர்ப்போம்.
நாங்கள் ஆசிரியப் பணியில் உன்னதநிலையை நோக்கிச் செயற்படுவோம்.
4.1 நாங்கள் தொடர்ந்து கற்பதைக் கடப்பாடாகக் கொள்வோம்.
4.2 எங்கள் சக ஆசிரியர்களின் மேம்பாட்டிற்குப் பங்களிப்போம்.
கோட்பாடு 5
நாங்கள் எங்கள் குறிக்கோளை அடைவதற்கு, பெற்றோர் மற்றும் சமூகத்தினரின் நம்பிக்கையையும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவோம்.
நாங்கள் பெற்றோரையும் சமூகத்தினரையும் கல்வியின் பங்குதாரர்களாக மதிக்கிறோம்.
5.1 நாங்கள் பெற்றோருடனான அர்த்தமுள்ள தொடர்பினைப் பேணுவோம்.
5.2 நாங்கள் சமூகத்தினருடன் உடனிணைந்த தொடர்பினை வளர்ப்போம்.